Posts

Showing posts from August, 2018

சிறுகதை: ஆவணம்

Image
வாயில் காராபூந்தியை மென்று கொண்டு...கையில் விகடனின் வலைபாயுதே பக்கத்தை வைத்துக் கொண்டு தலையைப் புத்தகத்திலிருந்து எடுக்காமலேயே "லதா மா" என்று அலறினான் தாஜுதீன், அருகில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2இல் கால்பந்தாட்டமும் கடமையே என்று சுவரோடு பதிந்திருந்த LEDயில் ஓடிக்கொண்டிருந்தது. நாப்பத்தி மூன்றை மறைக்க மண்டைக்கு ப்ளேக் ரோஸ் போட்டுப் போட்டு நடு நெவுதியில் அடர்த்தி குறைந்து, நெவுதியில் வைத்த குங்குமம் உச்சந்தலை வரை சென்று, வெள்ளை பைஜாமா அணிந்திருந்த லதா தோசை திளிப்பியை தோளில் வைத்தபடி வடக்கு பக்கமாக இருந்த சமையலறையிலிருந்த கதவோரத்தில் எட்டி பார்த்து "ஏன்டா கத்துற?" என்று மீண்டும் மறைந்தாள். தாஜுதீன் "எவ்வளவு நேரந்தான் இந்த விகடன படிக்குறது...சார் எப்பதான் வருவாரு? இப்பவே மணி ஆறாச்சு, இனி அவரு வந்து ஷு போட்டு ராக்கெட் எடுத்துட்டு கெளம்புறதுக்குள்ளையே இருட்டீரும்...இன்னைக்கு வார்ம் அப் மட்டும் தான் பன்ன முடியுமாட்ட இருக்கு" சமையலறையிலிருந்து பதில் வரவில்லை, "ம்மா...எங்க தான் போயிருக்காரு அவரு? கால் பண்ணி கேளுங்க...லேட் ஆகும்னா நான் எங்க வீட்டுக்கு போய்

இவங்க படத்துல இது நிச்சயமா இருக்கும்!

Image
ஒவ்வொரு டைரக்டரும் தங்களோட டெம்ப்ளேட் முத்திரையை, தங்களோட படங்கள்ல பதிச்சுடறாங்க. இங்க சில இயக்குநர்களும், அவங்க படங்கள்ல இருக்கற சில ஒற்றுமைகளும்..  கௌதம் வாசுதேவ் மேனன்      இவர் படத்த எடுத்துக்கிட்டோம்னா, ஹீரோவுக்கு எவ்வளவு டீசன்ட்டான லுக் கொடுக்க முடியுமோ அவ்வளவு டீசன்ட்டான லுக் கொடுத்திருப்பாரு. காது கட்டிங் கிருதா இருக்கும். அதாவது எந்தப் படத்துலயும் காதுல பாதிக்குக் கீழ ஹீரோவுக்கு கிருதா இருக்காது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில நம்ம சிம்புவுக்குக் கூட கிருதாவ கட் பண்ணி விட்டிருப்பார். ஹீரோயினை செம அழகாவும், மாடர்னாவும் காட்டீருப்பாரு.       அடுத்து இவரு படத்தில ஹீரோயின பாத்த ஃபர்ஸ்ட் சைட்லயே ஹாரிஸ் ஜெயராஜ் அல்லது ரஹ்மான் BGM போட்டு ஹீரோவோட இதையத்த வெடிக்க வெச்சிருவாங்க. நடுவுல 'நடுநிசி நாய்கள்' படம் மட்டும் ஏதோ மிஸ் ஆயிடுச்சு.  அதிகமா மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பத்தின சீன்  இருக்கும். ஏன்னா அவரும் மெக்கானிக்கல் தான! எது எப்படியோ படத்த செம க்ளாசா கொடுத்திருவாரு.  அச்சமென்பது மடமையடா படத்தில மட்டும் ஏன் பாஸ் சிம்புவுக்கு தாடி?... சுந்தர்.சி   கண்டிப்பா ஒரு

பப்பி லவ்வு

Image
கா லேஜ் வந்தாச்சு, காலேஜும் அரியர்லாம் க்ளியர் பன்னி முடிச்சாச்சு, ஒரு வழியா கஷ்டப்பட்டு வேலையும் வாங்கியாச்சு, அப்படி ஒரு நாள் வீட்டுல கே டீவி பாத்துட்டு இருக்கும் போது சேரன் சாரோட ஆட்டோகிராப் படம் பார்க்க நேர்ந்தது,அப்பத் தான் இந்த எண்ணம் தோனுச்சு, "ஏன் சேரன் சாருக்கு மட்டும் தான் ஆட்டோகிராப் இருக்குமா?, நமக்கெல்லாம் இருக்காதா"னு, அதனோட விளைவு தான் இந்த பப்பி லவ்,நம்ம பர்ஸ்னல் டைரிய எடுத்து அதனோட பக்கங்கல புரட்டுனோம்னா, அதுல முக்கால் வாசி பக்கத்த நிரப்பி இருக்கிறது ஆட்டோகிராப் படம் கமலா மாதிரியும் பிரேமம் படம் மேரி மாதிரியும் இருக்குற நம்மலோட பப்பி லவ் கதைகளாகத் தான் இருக்கும். 90 களில் பிறந்த நம்மலோட டைரிய புரட்டும் போது வருகிற பப்பி லவ்ஸ் ஃபிளேஸ்பேக் தான் அடுத்து வரும் பத்திகளில். முன்னுரை           நம்மல சுத்தி என்ன நடக்குதுனே நமக்கு தெரியாத வயசுல,நமக்கொன்னு அழகாகத் தெரியும் அது தான் நம்ம பப்பி லவ். அத்தன நாளா ரஜினி சாரோட சண்ட சீன் பாத்திட்டிருந்த நம்மள கமல் சாரோட லவ் சீன் பாக்கவும் வாய்ப்பளிச்சது இந்த பப்பி லவ்வாகத் தான் இருக்கும். முதன் முதலில் கவிதை

விஜய் வெறியர்களுக்கும் அஜித் வெறியர்களுக்கும்....

Image
த லைப்பில் விஜய் பெயரை முதலில் போட்டு அஜித் பெயரை இரண்டாவது போட்டதில் என்னுடைய எந்த ஒரு ரசனை ஈடுபாடும், நீங்கள் சொல்வதுபோல் வெறி தன்மையும் இல்லை. விஜய் அவர்களையும் எனக்குப் பிடிக்கும், அஜித் அவர்களையும் எனக்குப் பிடிக்கும், அவர்களை வைத்து இயக்குகின்ற இயக்குநர்களையும், அவர்களுக்குக்காக வெறித்தனமாக செயல்படும் அவர்களின் வெறியர்களையும்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலபிஷேகம், பட்டாசு, மாலைகள், தோரணங்கள், மொபைலில் வால் பேப்பர் வைப்பது, ‘தல’ என்று சொன்னால் கத்துவது, ‘தளபதி’ என்று சொன்னால் கத்துவது, நீங்கள் கத்துவதற்காக அவர்களின் பெயரை வைத்து மற்றவர்கள் மார்கெட் பண்ணிக்கொள்வது... இவையெல்லாம் நல்லதுதான். பண்ணுங்கள். நீங்கள் இப்படிப் பண்ணுவதால் பட்டாசு, பால், பூ வியாபாரிகள், திரையரங்கு, அங்கு வேலைப்பார்ப்பவர்கள் அதைச் சார்ந்தவர்கள் போன்ற அனைவரின் வியாபாரமும் பெருகும். நல்லது. மேலும், நீங்கள் அப்படிச் செய்வது ஒரு ரசிகனின் உற்சாகம்தான். இதில் தவறில்லை.  ஆனால், அவர்கள் என்ன கதைகளில் நடித்தாலும் அதுக்கும் இவ்வாறே செய்வதா? அதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதைகளில் பத்து பைச

பேச்சு பேசட்டும்

Image
பே ச்சுவார்த்தைகளுக்கு முழு மதிப்பு கொடுப்பவன் நான். சிறந்த பேச்சுக்கு வீரத்துடன் சம பங்கு உண்டு என்பதை உணர்ந்தவன் நான். பேச்சு என்பது பேசுதல் மட்டும் அல்ல; அந்தப் பேச்சைக் கேட்கும்போது அதனினும் பயன். அப்படிப்பட்ட பேச்சில் இப்போது ஒரு கருத்தைச் சொல்வதற்குள் முழங்கால் வழியாக மூக்கை தொடுவதுபோல் பேசுகிறார்கள். சிறுவயதிலிருந்தே பார்த்து சலிப்படைந்து விட்டது. ஒரே பாணி. கவியரங்கத்தில் இருந்து கட்சிக்கூட்டம் வரை ஒரே இழுவைதான். ஒருமுறை ஆத்திச்சூடி படிக்கவே நமக்கு இப்போது நேரமில்லை. இதில் எங்கே போய் மூவாயிரம் முறை மகாபாரதம் படிப்பது. சரி, நானும் அவர்களைப் போலவே இழுக்க விரும்பவில்லை. பொருளுக்கு வருகிறேன். நான் ஒன்றும் மேடைப் பேச்சாளனோ, புலவனோ, கட்டுரை மன்னனோ, இலக்கிய, இலக்கண சக்கரவர்த்தியோ கிடையாது. ஆனால், ஒரு நல்ல பேச்சு, நல்ல கவிதை, நல்ல கட்டுரை, நல்ல இலக்கணம் எப்படி இருக்கும், எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என உணர்ந்து ரசிக்க தெரியும். நான் நல்ல ரசிகன். அந்த உங்கள் ரசிகனின் மனது சலிப்பு தட்டிவிட்டது. அவனுக்கு புதியது தேவைப்படுகிறது. அது தொடர்பாகத்தான் இங்கே, இப்போது... மேடைப் பே