Posts

Showing posts from December, 2023

நகுவா நயனா (சிறுகதை)

Image
நகுவா நயனா ம கிழ்ச்சியை பிறரிடம் பகிர அது இரட்டிப்பாகும், துக்கத்தை பிறரிடம் பகிர அது பாதியாய் குறையும் என்பார்கள். ஆனால், சில மகிழ்ச்சியையும் சரி, சில துக்கத்தையும் சரி எவரிடமும் பகிர முடியாது. அப்படி பகிர முடியாத இரகசியங்கள் தான் கடவுளைத் தேடச் சொல்கிறது. கடவுளிடம் பகிர்வோம் என்று மனதை தேத்திக்கொள்ள வைக்கிறது. ஆனால் ஜனார்த்தனனுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லையே. கோத்தகிரி வட்டாரமே அவனது கட்டுப்பாட்டில், அவனது அதிகாரத்தில் இயங்கிக் கொண்டிருக்க, அப்போது அவனுடைய மனதின் கட்டுப்பாடு அவனிடம் இல்லை. முகத்தை முழுவதும் சவரம் செய்ததால், நாற்பது வயதின் அடையாளமான சதை முகத்திற்கு கீழே கழுத்தை கொஞ்சம் மறைத்துக் கொண்டிருப்பது, எதிரில் உள்ள அவனுடைய அலுவலகக் கண்ணாடியில், நன்றாகத் தெரிகிறது. அதனைத் தடவிக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். ஜனவரியின் குளிருக்கு காலை பதினோரு மணியெல்லாம் தெரியவில்லை. எழுந்து அறையின் ஹீட்டரை போட்டுவிட்டு அமர்ந்தான். அலுவலக உதவியாளர் பம்பியபடி கதவிடம் வந்து நின்றார். ஜனார்த்தனன்  "வாங்க" என்றதும், அலுவலக வருகை குறிப்பேடுகளை கட்டிக்கொண்டு உள்ளே வந்தார். அதை அவன

87 - 38A (சிறுகதை)

Image
87 - 38A (சிறுகதை)    "அதெப்படி இன்ஸூரன்ஸ் கெடைக்காம போகும்! அனெக்ஸர் செவன் ஃபார்மும் கொடுத்தாச்சு நீங்க நாளைக்குப் போய் கீழ கத்திவிடுங்கமா, எனக்கு லீவ் வேற இல்ல இல்லைனா நானே நாளைக்கு இருந்து பேசிருவேன்" என்று என் தோள் பையையும், வீட்டிலிருந்து அம்மா எனக்காக கொண்டு வந்திருந்த கட்டப்பையையும் எடுத்துக் கொண்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமணை ஏ வார்டில் 120-வது அறையில் அப்பாவின் சிறுநீரக கோளாருக்கான மருத்துவ சிகச்சையில் இன்ஸூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட கோபத்துடன் அன்று இரவு கோத்தகிரிக்கு ஒன்பதே காலுக்கு கிளம்பும் கடைசி பேருந்தைப் பிடிக்க கிளம்பினேன். "இந்த வீட்டுக்கு வந்தாப்புடிச்சு எதுவுமே சரியில்ல, மொதல்ல நம்ம சீக்கிரம் வேற வீடு மாறனும்" "சும்மா இருங்கப்பா, உங்க உடம்புல அக்கறையில்லாம இருந்துட்டு வீடு சரியில்ல அது சரியில்லனு" என்று நான் ஆவேசப்பட "ஏய் மணி இப்பவே ஆறே கால் ஆச்சு, போய் பஸ்ஸ புடிக்க முடியாம போயிற போகுது கெளம்பு... பஸ் ஏறீட்டு கூப்பிடு..." என்று அம்மா, நான் அப்பாவுடன் வாக்குவாதம் செய்யப் போனதை தடுத்து தாட்டிவிட்டார்.   அடுத்து பணத்து