Posts

Showing posts from March, 2019

மிஸ் யூ மை டியர் 12த் சிலபஸ்...

Image
தீடிரென பஸ் ஸ்டாண்டிலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ பள்ளியில் தெரிந்த பழைய முகங்களைப் பார்த்ததும் ஒரு நிமிடத்திற்கு மேல் 'இவன்ட்ட இதுக்கு மேல என்ன பேசுவது???' என்று டாப்பிக் கிடைக்காமல் போகும் காட்சிகளைக் கடந்து வந்த என்னைப் போன்ற அபலைகளுக்கான சரியான ச்சாய்ஸ் நம்முடைய 12த் சிலபஸ் டாப்பிக்... "அவ்வளோதான்ப்பா...இந்தவாட்டி உங்களுக்கு 12த் சிலபஸ் மாறீடும்" , இந்த வாக்கியத்தை  நம்ம 10த் படிக்கும் போது இருந்தே கேட்டு கேட்டு சலித்துப் போய் வந்திருப்போம்... அப்படி இப்ப மாறும் அப்ப மாறும் எனச் சொல்லிச் சொல்லியே 2007ல வந்த சிலபஸ் ஒரு டஜன் வருசமாக 2019 என கங்குலி ரெக்கார்டுல இருந்து பிரித்வி ஷா ரெக்கார்டு வரைக்கும் பாத்திருச்சு...  ஆனால் திரு. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இந்த முறை கட்டாயம் மாறிடும்னு சொல்றாங்க. அதுக்குனு கமிட்டிலாம் போட்டிருக்காங்க. எனவே இந்த முறை கட்டாயம் மாறீடும்னு நம்பி இந்த மிஸ் யூ 12த் சிலபஸை டைப் பன்னுகிறேன். ஏன் 11த் சிலபஸையெல்லாம் நீங்க மிஸ் பன்னுலையானு கேட்டா? வெரி வெரி சாரீ 11த் சிலபஸ், உன்னைய பத்தி எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஆக, அடுத்து வரும் பத்த

கா.....தல்

Image
     இ தயமென்ன இதயம் என் கல்லீரல் நுரையீரல் எல்லாம் நீதானே... சதையும் நரம்பும்போல் அல்லாமல் சந்திர சூரியனாய் குறுகிய அந்தியில் குளிர்ந்த பார்வையில் அளவு காதல் பாராட்டி திகட்டாத தேனை ஒன்றாய் ருசித்தோமே... என்னுயிர் என்னிடமே உன்னுயிர் உன்னிடமே நம் பொழுது நம் வசமே... கனவிலும் நீ இல்லை தூக்கம் கூட கெடவில்லை, ஆக, சிற்றின்பக் காதலா?... அவர்கள் நாங்கள் இல்லை... அப்பா காசும் அதிகச் செலவில்லை இருந்தும் காதல் பாசம் தாழவில்லை மானசீக அன்பு மனதில் இருக்கு, மணிக்கணக்கில் ஃபோனில் மற்ற புலம்பல் எதுக்கு? நம்மை நாம் உணர்ந்து நாளாச்சு பிறகு 'சாப்பிட்டாயா?, சளி சிந்துனாயா?' வார்த்தை எல்லாம் சலிப்பாச்சு... அவள் இல்லா நேரம் ஏங்கவில்லை, ஆனால் இருக்கும் நேரம் இச்சையின் எல்லை... தாக்கம், ஏக்கம், தன்மை, பொறுமை நன்மை தீமை உணர்ந்து நம்மை நம் வசமே வைக்கும் காதல் உண்மை... தேகம் கண்ணாடி, தென்றல் பார்வையடி, விண்மீன், மின்னல்கள், தாமரை, நிலா, தங்கத்தின் உலா, மயில், முயல், கண்கள், கவிதை கன்றாவதி; காலாவதி; இதுப்போன்ற உவமைகள் இன்னும் எதற்கு? அவளின் எழிலி

எனக்கு பிடித்த புறநானூறுடன் என்னுடைய அனுபவமும்...

Image
புறநானூறு - கிமு இரண்டாம் நூற்றாண்டுக்குள் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் (காலம் இன்று வரை உறுதியாகத் தெரியவில்லை) எழுதி தொகுக்கப்பட்ட காதல் அல்லாமல் வீரம், கொடை, வளம், மக்கள் வாழ்வு, எனப் புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு. நாள் தோறும் முடிந்த அளவுக்கு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் தவறாமல் படித்து வருகிறேன்... இப்போது தான் தொடங்கியிருக்கிறேன்,... அதில் வரும் பாடல்கள் பெரும்பாலும்  அரசர்களைப் புகழ்ந்து பரிசில் பெரும் நோக்கத்தில் பாடுவதாக இருந்தாலும் பல இடங்களில் பாடல்கள் அப்போதே இப்படி பாடியிருக்கின்றனரா? உவமையின் பிரமாண்டம் யப்பா!? என வியக்க வைக்கின்றது... அதில் உள்ள எனக்கு மிக நெருக்கமான பாடல்களை இங்கே பதிவு செய்யலாம் என்ற முயற்சியில் தான்... இங்கே பாடலுக்கு முன் முதலில் இருக்கும் எண் நான் இந்த வலைதளத்தில் அறிமுகப்படுத்தும்  வரிசையையும், இரண்டாவது இருக்கும் எண்ணானது புறநானூறு தொகுக்கப்பட்ட பாடலின் வரிசையையும் குறிக்கும்... 1- 243 இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ, தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, தழ

சிறுகதை: நீச்சக்குரங்கும் கிட்கேட்டும்

Image
இன்று (ஜூன் 26, 2018), தி இந்துவில் இரண்டாம் பக்கத்தில் 'மந்திரக் கண்ணாடி' தொடருக்கு கீழ் அச்சிடப்பட்டுள்ள செய்தியால் நாம் விளங்கிக்கொள்வது என்னவென்றால் 'பழந்தமிழ்ச் சங்கம் இருந்தமைக்கான  விவகாரம், அதனை ஆய்வு செய்து வந்த தலை சிறந்த ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மர்மமான முறையில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு, சந்தேகத்தின் அடிப்படையில் போன மாதம் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் பேராசிரியரான முகமது யாசர் அராஃபத் கைது'. இன்றிலிருந்து இரண்டு நாள் முன்பு (இரவு 8.30), கதவை திறந்த புண்ணியமூர்த்தி "வெல்கம் மிஸ்டர். அராஃபத், இப்பதான் உங்கள பத்தி நெனச்சுட்டே இருந்தேன், ஆத்தரம் தீராம திரும்பவும்  அடிச்சிட்டு போலாம்னு வந்திருக்கீங்களா?" என தலையில் சிறிய கட்டோடு கீழ் உதட்டை பற்களால் கவ்விய படி சிரிக்கிறார்., அவரை சரியாக நிமிர்ந்து பார்க்க தயக்கப்பட்டுக் கொண்டே "இல்ல, நான் மண்ணிப்பு கேட்கலாம்னு தான் வந்தேன், எதோ ஆத்திரத்துல அந்த ஸ்டிக் ஃபைலை தூக்கி வீசப் போய் உங்க தலையில வந்து அது கீறீருச்சு, நான் கான்ஃபிரன்ஷ்ல அப்புடி கோப பட்டிருக்கக் கூடாது" என்று தனத

சிறுகதை: சாதி சனம்

Image
  சாதி சனம் முகம் மங்கியே இருந்தது...அடையாளங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது...ஆனால் சரியாக யாரென்று தெரியவில்லை... ஞாபகம் வந்தது... அவள் இந்திரா, பெரம்பலூரில் பணியில் இருந்த போது அலுவலகத்தில் உடன் பணியாற்றிய கேஷவனின் அக்கா... ஏங்கி ஏங்கிப் பேசுகிறாள், அவனுக்கு அருகில் நெருக்கமாக இருக்கிறாள்... அவன் எதிர் பார்ப்புகளை எல்லாம் அவள் பூர்த்தி செய்வாள் என்பதை உணர்ந்திருந்தான். வயதில் மூத்தவளே என்ற எண்ணம் துளி கூட அவனுக்கு இல்லை. அவள் முகத்தைக் காட்டிலும் அவள் முகத்திற்கு கீழ் உள்ளவைகள் தான் அவனுக்கு இப்போது கவர்ச்சியாகத் தெரிகிறது, சுடிதாரில் எடுப்பாகத் தெரியும் மார்பகங்கள், தொப்புளின் குழி தெளிவாகத் தெரியுமளவிற்கு இறுக்கமான சுடிதார், ஆனால் சுடிதாரின் நிறம் என்ன மாதிரி இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை. காதோரத்திலும், கழுத்திற்கும் மார்பிற்கும் இடைப்பகுதிகளிலும் வேர்வைகள் படிந்திருக்கிறது, அவளது பார்வைக்கு ஒரே அர்த்தம் தான் விளங்குகிறது, அர்த்தம் காதல் கூட இல்லை. அவனுக்கு உடல் எங்கும் காற்று நிறைந்திருந்தது போன்ற நிலை... அருகில் இன்னொருத்தி, சோஃபியா. கல்லூரியில் உடன் படித