Posts

Showing posts from February, 2021

ரியலிஸம் (சிறுகதை)

Image
  ரியலிஸம் கிராமம் தான், அவனுடைய சொந்த ஊர் தான், மத்தியாணத்தில் மரங்கள் கூட அசையாமல் ஊரே அமைதியாகக் கிடக்கிறது.  பயந்துவிட்டான், கிரில் கதவினை தாண்ட முடியாமல் அந்தக் குட்டையான நாய் அடித் தொண்டையிலிருந்து குரைக்கிறது. ஜாக்கிறதயாக அந்தக் கதவினைக் கடந்து நடக்கிறான்.  கொஞ்ச தூரம் சென்று பாதி சுரண்டப்பட்ட ஜெயலலிதா படம் ஒட்டிய சோலார் கம்பத்தைத் தாண்டி ஒரு சந்தில் திரும்புகிறான். நான்கு வீடு தள்ளி பந்தல் போட்ட வீட்டில் கொஞ்சம் கூட்டமாக இருந்தார்கள். அவனுடைய ஃபோன் அடிக்கிறது. எடுத்து... நான்கு முறை 'ம்ம்' சொன்னான். "சரிம்மா... என்ன ஆச்சுனு விசாரிச்சுட்டுக் கூப்பிடுறேன்" சின்ன இடைவேளைவிட்டு "ஆமாமா... காலேஜ் லீவ் போட்டிட்டுத் தான் வந்திருக்கேன்... சரி வைங்க, அவுங்க வீடு வந்திருச்சு... கூப்பிடுறேன்" அந்தக் கூட்டமாக இருந்த வீட்டிற்குள் செருப்பைக் கழட்டிவிட்டு அவனும் தயக்கமாக நுழைந்தான். அமைதிக்கு நடுவில் பரபரப்பு காணுவதாக இருந்தது வீடு. நாற்பது வயதைக் கடந்த நான்கைந்து பெண்கள் தான் வீட்டின் வெளியில் சத்தம் வரமால் பேசிக் கொண்டிருந்தார்கள், அங்கு போன அவனைப் பற்றியும் அவர்க

ஊனமுற்றவர்கள்

Image
  ஊனமுற்றவர்கள் அவனுடன் அதில் வர வேண்டும்... அவனை அணைத்துக் கொண்டு அவளின் இரயிலை ரசிக்க வேண்டும்... தான் ரசித்ததை அவனும் ரசிக்கக்கண்டு பூரிக்க வேண்டும்... அவனுடனான அவளின் இரயில் பயணக் கனவுகள் இரயிலைப் போலவே நீண்ட கனவுகள்... அவளுக்கு இரயில் பயணம் என்பது  அத்தனை விருப்பம்... ஆற்றின் மீது செல்லும், மலையைக் குடைந்து செல்லும், இரவைக் கிழித்துச் செல்லும், அதிலேறி அவள் அடிக்கடி செல்வாள்... காரணங்களின்றி முகவரிகளின்றி உலகத்திலிருந்து தொலைந்தவளாய் அவள் பாட்டிற்கு அதில் செல்வாள்... பல்லாயிரம் மையில்கள், நொடிக்கு நொடி மாறும் முகங்கள், இரயில் கடக்கும் நொடிக்குள் அவர்களது வீட்டில் ஒருகணம் வாழ்ந்து செல்வாள்... குதிச்சு கையசைக்கும்  சிறுவர் கூட்டம்,  இரயில் விரைய இரயில் படியிலமர்ந்து அவள் பதில் கையசைக்க, பதரிப்போய் பார்ப்பாள் சிறுவர் கூட்டத்தில் அவளையும்... கூவி வரும் சுண்டல்களை வாங்குவாள், ஜன்னல் கம்பிகளைத் தட்டி எழுப்பும் காபிகளை குடிப்பாள், தேவைகளின்றியும் விற்றுவரும் பின்னூசிகளை வாங்கிப் போடுவாள்... இரயில் தொடர்பான அனைவரும் தனக்கும் தொடர்பானவர்கள் என்று நினைப்பாள்... அவளின் கனவும் நிறைவேறியது, அவ