Posts

Showing posts from January, 2021

சகப்பயணி

Image
  சகப்பயணி எந்தப் படம், யார் இசையென்று எதுவும் தெரியவில்லை, மூன்று நிமிடமாக கேட்கிறேன் பாட்டின் சூழல் கூட எனக்கு விளங்கவில்லை... எதோ பாடல் ஓடுகிறது... இரவு ஏழு மணியிருக்கும்... புறநகர் பேருந்து... கூட்டம் பெரிதாக இல்லை... இருந்தும் எனக்கு அமர இருக்கையில்லை... ஜன்னல் பக்கமாக பார்த்து யாரும் பார்க்காதவாறு அழ முயற்சிக்கிறான்... அழுவது எனக்குத் தெரிகிறது... பக்கத்தில் இருப்பவன் பாதித் தூக்கத்தில் வருகிறான்... மடியில் தோல்பை மடிப்புகள் கசங்காத சட்டை... முடிகளும் சீராகத் தான்... கையில் கைக்குட்டையில்லை புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்... சளியுடன் அவன் மூச்சை இழுத்தது பக்கத்தில் நின்ற எனக்கே கேட்டது... மீண்டும் தேம்பிய நீர் தேம்புகிறான்... ஜன்னல் பக்கமாக திரும்புகிறான்... வேறு யாருக்கும் அவன் அழுவது தெரிய வாய்ப்பில்லை... அந்த இடத்தில் நின்றதால் சரியாக எனக்கு மட்டும் தெரிகிற சந்தில் அழுவது தெரிகிறது... ஓடும் பேருந்தில் இத்தனை பேருக்கு நடுவில் கட்டுப்படுத்த முடியாத அழுகைக்கு என்ன காரணம்? கேட்க வேண்டுமாய் இருந்தது... பக்கத்தில் இருப்பவன் யார

சுயநல-வாயர்கள்

Image
  சுயநல-வாயர்கள் வருகிறவர்கள் போகிறவர்கள் எட்டிப் பார்ப்பவர்கள் என எல்லோருக்கும் நம்மிடம் சொல்ல அவர்களுடைய கதைகள் அதிகமாக இருக்கிறது... கடிக்காமல் காதருகே சுத்தும் அந்தக் கொசு போல 'கொய்' என்று எப்போதும் புலம்புகிறார்கள்... நினைத்துக் கொள்கிறார்கள் அவர்களுடைய கதைகள் ஆகா ஓகோவென சுவாரஸ்யமானதாக இருக்கிறதென்றும், அதைக் கேட்கும் நம் காதுகள் புண்ணியம் செய்தவையென்றும்... அவர்களைச் சொல்லி என்ன செய்வது!? நமக்கு எங்கு போனது புத்தி? 'லேசாக தலை வலிக்கிறது' 'போனில் சார்ஜ் நிக்க மாட்டீங்குது' 'இதோ அம்மா அழைக்கிறார்' 'ஒரே நிமிடம் வருகிறேன்' 'வெளியில் அவசரமாக...' இது போன்று எதையாவது சொல்ல வேண்டாமா?! கேட்கிறோம்... புளித்துப் போன அவர்களது கதையைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்... சம்பந்தமற்று அவர்களுடைய பெரிப்பாக்களின் வயிறு வலி கதைகளுக்குக் கூட பல சமயம் நம் காது அகப்படுகிறது... அவர்களின் பெரிப்பாவிற்கும் நமக்கும் என்ன தான் தொடர்பு?! பிறகு யோசிக்கிறோம்... நாம் யோசிக்கும் போதும் அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்