Posts

Showing posts from April, 2021

திட்டப்போகிறேன்

Image
  ஏய் உன்னைத் தான்... என்ன பார்க்கிறாய்?! கண்டபடி திட்டப்போகிறேன்... திடமாயிரு. உன்னை மட்டுமில்லை உன் இனத்தையே... திட்டப்போகிறேன். தேற்றிக்கொள். உன்னையே தான்... நான் பேசுவதை சட்டை செய்யாமல் ஒரு பக்கம் அடைத்து கொண்டும் ஒரு பக்கம் ஒழுகுகிறாயே... உன்னையே தான்... பார்க்காதே... ஆமாம் சளியே  உன்னைத் தான்... திட்டுகிறேன்... என்னுள் வந்த வில்லனைத் கொல்லவே நீ வழிகிறாய்... நான் அறிவேன்... இருந்தும் ஏன் நீ இப்படி  இருக்கிறாய்?... காது இருந்தால் கேள்... தயவுகூர்ந்து கேள்... என் இனிமையான குரல் இழுத்துக் கட்டியது போல் ஒலிக்கிறதே, இதற்கு நீ தான் காரணம்... ஒரு பக்க மூக்கை அடைத்துள்ளாய்... மத்தியான வெய்யிலில் சுத்தமாக நீர் வறண்டிருக்கும்... கண்ணாடி பாட்டிலில் Slice சிரிச்சிருக்கும்... கொஞ்சூண்டு குடிப்பேன் அப்போதே வந்துவிடுவாய்... சில சமயம் மாதுளைக்கு ஐஸ் போட்டாலே  கோபமாக 'ஹாய்' சொல்லுவாய்... ஐசை எனக்கு அவ்வளவு பிடிக்குதே! உனக்கு ஏன் பிடிக்கவில்லை? எவன் எவனோ என்னென்னமோ குடிக்கிறான், அவனையெல்லாம் விட்டுவிட்டு அரை கிராம் ஐஸ் போட்டு குடித்த  என்னை பிடித்துக் கொள்கிறாயே? நியாயமா?! உனக்கு இன்னொன்று