Posts

Showing posts from January, 2022

நூலகத்தில்

Image
  ஒ ரு நாள் மதியம், நான் தினமணியை படித்துக் கொண்டிருந்தேன். அவர் வந்தார். காலெல்லாம் புழுதியாக, அங்கும் இங்குமாக மண்டை நரைத்திருந்தது, ஆனால் அவ்வளவு வயதானவராய் தெரியவில்லை. முகத்திலும் புழுதி. பச்சை நிறத்தில் பணியன், அதற்கு சம்பந்தமில்லாத லுங்கி. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் என்ன என்று கேட்பது போல் தலையை ஆட்டினேன், பதில் பேசாமல் என்னையே பார்த்திருந்தார். தினமணி படிக்கிறீங்களா? என்றதற்கும் பதிலில்லை, நான் அவரை பார்க்காதது போல் மீண்டும் தினமணியைப் புரட்டினேன். வேளாண் அலுவலராக தாராபுரம் வந்து ஆறு மாதமாகிறது. தவறாமல் ஒரு மணி நேரமாவது இந்த நூலகம் வந்துவிடுவேன். நீங்கள் மாவட்ட கிளை நூலகம் சென்றிருக்கிறீர்களா? இந்த நூலகம், எண்பதுகளில் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடம். அசோக மரங்களும், பழைய வேப்ப மரங்களும் சூழ நகரத்தின் மையத்தில் பச்சை தீவு போல் தனித்துத் தெரியும். காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை இயங்கும். பெரும்பாலும் காலை எட்டு முப்பதிற்கு திறந்துவிடுவார். அரிதின் அரிதாக இரவு ஏழே முக்கால் வரை சமயங்களில் திறந்து வைத்திருப்பார்கள் இல்லையேல் ஏழு முப்பதிற்கு மணியடிக்கப்படும். கீ