Posts

Showing posts from July, 2023

அந்த ஆங்கில வார்த்தை

Image
அந்த ஆங்கில வார்த்தை சூழ்நிலைக்குள் செல்வதற்குள் என் பள்ளியைப் பற்றி விவரித்துவிடுகிறேன். ஆண் மாணவர்கள் பெண் மாணவிகளுடன் பேசுவது அயோக்கியத்தனம். அந்த ஆண்டு பத்தாவது பன்னிரெண்டாவது பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண், முடிந்தால் மாநில அளவிலேயே முதல் மதிப்பெண் எங்கள் பள்ளியின் பெயர் வரவேண்டும் என்ற ஆசையின் மூர்க்கத்தனம். ட்டை கழுத்தின் காலர் பட்டனிலிருந்து ஒரு இன்ச்க்கு மேல் கீழே இறங்கியிருந்தால் பீட்டி ஆசிரியரிடம் அடி விழும். பள்ளி முதல்வருக்கு சோப் போடுவதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் காக்கா புடிக்க இறங்கும் ஆசிரியர்கள். பொதுத் தேர்வில் மாணவர்கள் நூத்துக்கு நூறு எடுத்தால் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை ஓரம் கட்டி அப்போதிருந்து பன்னிரெண்டாம் வகுப்புப் பாடம் படிக்க வைக்கும் உறுத்தலற்ற குறுக்குப் புத்தி. எங்கள் பள்ளியின் போட்டிப் பள்ளியான விவேகம் பள்ளியில் ஞாயிறு விடுமுறையை ஒன்பதாவதுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு இரத்து செய்தார்கள். அதனால் அன்றிலிருந்து எங்களுக்கும் ஞாயிறு கூட விடுமுறை இல்லை. காலை எட்டு முப்பதிலிருந்து பத்து மணி வரை நடக