Posts

Showing posts from November, 2019

29-11-2019 கொல்லிமலைக்கு இன்றே பிறந்தநாள்- பயணக்கட்டுரை

Image
இது என் அம்மாவுடனான பயணம். காட்டு ஜாலியாக இருந்தது. மலையின் 70 வளைவுகளிலும் அம்மா தான் ஓட்டி வந்தார். கழுத வயதுக்கு அப்புறம் அம்மா பின்னாடி உக்கோந்து கொல்லி மலையைச் சுற்றியது அருமையாக இருந்தது. இந்த scooty யில் தான் சென்றோம் கீழே என் கையில் உள்ளது என்ன பழம் என்று தெரிகிறதா? (ரேகை முக்கியமில்லை) பதில் இந்தக் கட்டுரையின் நடுவில் சொல்லியிருக்கிறேன்... ???????? ஒரு நாளில் கிடைக்கும் உற்சாகத்தை வைத்து உங்களுடைய அந்த மாதத்திற்கே ஆன வேலைப் பலுவிற்கும் மன அழுத்தத்திற்கும் தேவைப்படும் கச்சா பொருளை நிறப்புவதாக அமையும் இந்த ஒரு பயணம். ஏன் உங்கள் வாழ்நாள் அனுபவமாகக் கூட இந்தப் பயணம் மாறும். அப்படிப் பட்டது கொல்லி மலைப் பயணம். ஆம், கொல்லிமலைக்கு 29-11-2019 இன்றே பிறந்தநாள் என் கண்கள் வழியாக. முதல் முறையாக கொல்லி மலைக்கு சென்று வந்துள்ளேன் அதான் தலைப்பு இப்படி. முக்கியமாக மூன்று அருவிகள், ஏகப்பட்ட கோவில்கள், 70 கொண்டை ஊசி வலைவுகள், அங்குள்ள மக்களின் ஏகபோக உபசரிப்புகள், குளிர், மழை இவைகள் தான் இந்த 1300 மீட்டர் ஈஸ்டர்ன் காட்டின் பிரமிப்பு. அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து கீ

பாலி அருவி - பயணக் கட்டுரை

Image
' பயணம் செய்வதற்கு தேவையான பணம், பயணம் செய்வதை விரும்பக் கூடிய மனநிலை இவை தான் ஒருவனுக்கு மிகப் பெரிய சொத்து ' என நா.முத்துக்குமார் மட்டுமில்லை நானும் சொல்கிறேன். பயணம் என்றால் கோவா தான் செல்லவேண்டும் கொடைக்கானல் தான் செல்ல வேண்டும் என்றில்லை அதுவும் செல்லலாம், அதுமட்டுமில்லாமல் உள்ளூரிலேயே நமக்குத் தெரியாத இடம் எத்தனை இருக்கிறது?! அதற்கும் செல்லலாம். பயணிப்போம்... Mall, Amazon prime, Netflix, Cinema Theater, எல்லாவற்றையும் அவ்வப்போது தாண்டி பயணிப்போம்... சேலம் நாமக்கல் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள வடுகம் ஆழமர பஸ் ஸ்டாப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் சென்று 10 நிமிடம் மலைப் பாதையைக் கடந்தால் 'பாலி அருவி கொட்டுதே அடி எம்மேல' பாடலாம். பட்டணம் பேரூராட்சியில் வடுகம் பகுதியில் உள்ள 'போத மலை'யின் அடிவாரத்தில் தான் பாலி அருவி கொட்டுகிறது. மழை மாதங்களில் தாராளமாகவே அதே சமயம் அரசு தடை விதிக்கும் அளவுக்கு அதிகமாகவும் இல்லாமல் அழகாகக் கொட்டுகிறது பாலி. என்னைக் கேட்டால் குற்றாலத்தைக் காட்டிலும் சிறந்த அருவி, இது. அமர்ந்து