Posts

Showing posts from July, 2019

பேய்க்கதை

Image
வணக்கம். சரியாக மணி இரவு பதினொன்னு முப்பத்தி நாலு; இங்க ஒரு அறுபது ரேசன் கார்டுகள் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு ரூமில் இன்னேரத்துலயும் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு வாட்ஸப்பில் இருநூத்து ஐம்பது வார்த்தைகள் டைப் பன்னும் பையன் - இதன் மூலம் அவன் வயதைக் கணக்கிட்டுக்கவும். இப்போது வாட்ஸப்பில் மிகவும் பிஸியாக விரல் வேலை செய்து கொண்டு இருக்கிறான், கூடவே இன்னொரு வேலையும் செய்து கொண்டிருக்கிறான். ப்ச்! அவன் இருக்கிற ரூம் எந்த ரூம் என சொல்ல மறந்துவிட்டேனே. அந்த ரூம், கழிவறை. ஆம், அங்கு தான் அவன் இருக்கிறான்; இருந்துகொண்டே ஹைக்கில் ஹச்.வர்ஷனி என்ற பெண்ணை நட்ஜிக் கொண்டும், வாட்ஸ் அப்பில் கார்த்திகா என்ற பெண்ணின் டீபியை லோட் பன்னிக் கொண்டும் இருக்கிறான். எனக்கு நன்றாகத் தெரியும், இவன் எப்போதும் இரவு பதினோரு மணிக்கு மேல் கழிக்கச் செல்லுவான்.  வழக்கம் போல் இரவில், தனிமையில் வாட்ஸப் நோண்டிக் கொண்டே, கழிவறையில் அமர்ந்து இருக்கிறான். அப்போது அவனுக்கு, பக்கத்து ரூமின் கதவில் யாரோ கை வைத்தது போல சத்தம் கேட்டது. உற்று கவனித்தான். இரண்டு நொடிகள். கார்த்திகா என்ற பெயரிலிருந்து வாட்ஸ் அப்பில் எதோ அதிகம