Posts

Showing posts from November, 2023

நிசப்தத்தின் சப்தம் (கவிதை)

Image
நிசப்தத்தின் சப்தம் நாட்டுச் சாராயமும் சுருட்டுக் கட்டும் சூடக் கட்டியும், அதில் கொளுத்திய கொத்து ஊது பத்தியும்... பத்தி பாதி எரிஞ்சாச்சு.. அஞ்சு முறை தண்ணி தெளிச்சாச்சு... முனியப்பன் முன்னாடி அந்த ஆடு தலையவே ஆட்ட மாட்டீங்குது! ஒரு வேல "கொல சாமீக்கு கோபமோ" ஊரு சனம் மூஞ்சீல ரணம் சாஞ்சு கெடுக்குது! ஆடு ஆட்டாமல் நகரும் நிசப்தத்தில் அந்த ஊரே நடுங்குது! கட்டி நாலு மார்கழி கடந்தாச்சு இன்னும் வயிறு கணக்குல மனம் கெடந்து கணக்குது! இந்த முறையாவது மனசு வை முனியப்பா! அரசமரத்தில் தான் கட்டிய தொட்டிலை பார்த்தபடி நிசப்தத்தில் பார்வதி... இன்னைக்குகழுத்துமுட்ட குடிச்சிருக்கும் கணவன், போனதடவ போலில்லாம கொஞ்சம் கௌரவமா நடந்துக்கிட்டா உனக்குப் புண்ணியமாப் போகும் முனியப்பா! நிசப்தத்தில் கலந்து கொண்ட கனகமணி! காது தான் வலிக்காதா இவளுக்கு?! இந்த மினுக்கு மினுக்குறா! ஆறு கல்லு கம்மலுடன் அருகில் நின்ற அலமேலுவைப் பார்த்து "வட்டிக் காசு வந்து கொலுத்து திரியுறா!" என்று நிசப்தத்தில் வயிற்றெரிச்ச