Posts

Showing posts from November, 2021

பல்லியைப் பிடிக்குமா?

Image
Dear Lizard... நான் என்னளவில் மயக்கமென்ன தனுஷ் போல் 'அதுவும் அது வாலும்' என்று பல்லியை பார்த்தால் குதித்தோடும் நபராகவே இருந்ததால், யாருக்கும் இந்தப் பல்லியை பிடிப்பதில்லை என்றே நினைத்திருந்தேன்.  பிறருடன் பல்லி பற்றி பேசும் போது, 'அப்பராணி அது பாட்டுக்கு இருக்கும்' என்று கடந்தார்கள். நான் என் கருத்தில் சற்று மாற்றமடைந்தேன். இன்னும் அதைப் பற்றி படிக்கும் போது ஹவாய் போன்ற இடங்களில் பலர் அதனை செல்லப்பராணியாகவே வளர்க்கிறார்கள்! ஒருவர் பொதுவாக 'பல்லியை ஏன் எல்லார்க்கும் பிடிப்பதில்லை?' என்ற கேள்வியை Quora- வில் கேட்டு வைக்க செல்லப்பிள்ளையாக பல்லியை வளர்ப்பவர்கள் கொந்தளித்துவிட்டார்கள்! ஆனால் அவர் கேட்ட நியாயமான கேள்விக்கு பதில் வரவில்லை. அக்கேள்வியை சற்று மாற்றி கேட்கலாம் 'அணிலைப் பிடிக்கும் பலருக்கு பல்லியை பிடிப்பதில்லையே ஏன்?'  'இல்லை எனக்கு பல்லியை பிடிக்கும், அனுதினமும் என் மூக்கு மீது தான் என் வீட்டு பல்லி படுத்துத் தூங்கும்' என்னும் herpetophilia-காரர்களெல்லாம்  இப்பத்தியோடு விலகலாம்.  எனக்கு அணிலை பார்க்கப் பிடிக்கும், தொட்டுப் பார்க்க அது அனு