Posts

Showing posts from December, 2021

காங்கிரஸ் வரலாற்றிலிருந்து ஜனநாயகத்தைப் பாருங்கள்

Image
உ த்திரப்பிரதேச தேர்தல் நெருங்குகிறது. பாஜக-வின் செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா அவர்கள் ராகுல் காந்தி அவர்களை இந்துவுமில்லை, இந்தியருமில்லை என்கிறார், ராகுல் காந்தி அவர்களோ தன்னை இந்து என்று நிரூபிக்க மேடை தோறும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதே நிலை தான் மாநிலங்களிலும். உதாரணமாக 'தமிழ் நாட்டை, தமிழர்கள் தான்' என்ற ஆவேசக் குரல்கள். அவர் தமிழரில்லை, அவருடை கொல்லுப்பாட்டி ஒரு மலையாளி, அவருக்குப் பிறந்த அவர் வந்து தமிழரான நமக்கு நல்லது செய்துவிடுவாரா?! என்ற அலறல்களை தேர்தல் தோறும் கடக்க வேண்டியுள்ளது. இவ்வேளையில் 1885-இல், மும்பை நகரின் கோவாலியா குளக்கரையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தொடங்கப்பட்ட, இந்திய காங்கிரஸ் அமைப்பின் தொடக்கவிழாவான டிசம்பர் 28-ஐ அனுசரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.  பம்பாய் மாகாணத்தில் நரோஜி புர்டுஞ்சி, தாதாபாய் நவ்ரோஜி அவர்களால் பம்பாய் அசோசியேசன், ஜி.வி.ஜோஸி, எம்.ஜி.ரனாடே, பால் கங்காதர் திலகர், கோபால் ஹரி  அவர்களால் பூனா சர்வோஜனிக் சபா, வங்காளத்தில் சுரேந்தர் நாத் பானர்ஜி, ஆனந்த மோகன் போஸ் அவர்களால் இந்தியன் அசோசியேசன், மெட்ராஸ் மாகாணத்தில் கசலு