Posts

Showing posts from March, 2023

கல்யாணம்

Image
  சிறுகதை- கல்யாணம் அண்ணா நகரில் ₹15,000 வாடகை கட்டும், வாகை மரம் சூழ்ந்த, அந்த வீட்டிலிருந்து தான் அவன் அம்மாவின் சத்தம் வந்தது. "கௌசு... அந்த கருமத்த நிறுத்தீட்டு இங்க வந்து ஸ்லாப் மேல இருக்க பூரி மிசுன எடுத்துக்கொடு". ஸ்பாட்டிஃபை பாட்கேஸ்ட்டில் ஆர்.ஜே.பாலாஜியின் நாலணா முறுக்கில் 'முடியுதிர் காலம்' என்று முடி உதிர்வதைப் பற்றி கேட்ட பயத்தில் தலையணையை அண்டக் கொடுத்துப் படுத்திருந்தான் கௌதம். "தம்பி... பூரி மிசுனுடா" என்று மீண்டும் பயங்கரமாக சத்தம் வரவே சமையலறைக்கு எழுந்து சென்றான். ஆர்.ஜே. பாலாஜியை அமுத்தினான். மேலே இருக்கும் பூரி மிசுனை எடுக்கும் போது, "அரணாக்கொடி என்னடா இவ்வளவு இறுக்கமா போட்டிருக்க?!" அவன் பதிலுக்கு யோசிக்காமல் அம்மாவே "வயிறு பெருசாயிட்டு இருக்கு... முதல்ல அதக் கொர" என்றாள். வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். கீழே பாக்ஸரும், வெறும் மேலுமாக நின்ற கௌதம் ஒரு கண்ணை தேய்த்துக் கொண்டே "அம்மா... நான் இந்த பொண்ணுட்டையும் கூப்பிட்டு சொல்லத் தான் போறேன்" என்று அம்மாவின் கண்களைப் பார்த்தான். பதிலில்லை. வெங்காயம் பொடி பொடி

ராணி சென்னம்மா-கே.எஸ்.ஆர்-லோனாவாலா

Image
  ராணி சென்னம்மா எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆதங்கம் இருக்கிறது. எங்காவது யாராவது அகப்பட்டால் அதைப் பொங்குவேன். அது மட்டும் எனக்கு பத்தவில்லை. மேலும் அதை எங்காவது பொது வெளியிலும் பகிர வேண்டும் என்ற நீண்ட நாள் அவா! இன்றிது சரியான தருணம். அதை இறுதிப் பத்தியில் ஆதங்கிக்கிறேன். வரலாறுடன் தொடர்பு இருந்தால் இக்கட்டுரையின் பாதியிலேயே என் ஆதங்கத்தை நீங்கள் யூகிக்க முடியும்.  கர்நாடக (குறிப்பாக பெங்களூர்) வாசி நண்பர்களே! யூபிஎஸ்சி படிக்கும், படித்த நண்பர்களே! உங்களுக்கு ராணி சென்னம்மா அவர்களையும், மிஸ்டர் கேஎஸ்ஆர் அவர்களையும் நன்றாக தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது தான் தெரிந்தது.  நான் பார்த்த வரைக்கும் ஒரு பழைய யூபிஎஸ்சி கேள்விகளிலும் கூட இவர்களை கடக்கவில்லை. தொடர்பு இல்லாமல் இவர்களை ஏன் நான் பேச வேண்டும்? என் இந்த பயணத்தின் 'ஊ'வே இவர்கள் தான்.  இடையில் குறுக்கிடவதற்கு பொறுத்துக் கொள்ளுங்கள். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் சரியாக 11.34 இரவு, பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸில் பெங்களூரு வந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் உறங்கிவிட்டனர். கழிப்பறைக்காக எழுந்து கேட்டி

தாராபுரம் டூ தாராவி

Image
 மும்பை வருவதற்கே முக்கிய காரணம், ஸ்லம்டாக் மில்லியனரில் உள்ள ஏ.ஆர்.ரகுமான். ரிங்கா ரிங்கா பாடலாக இருக்கட்டும், ஓ சயாவாக இருக்கட்டும், இங்கு போயே ஆக வேண்டும் என்று தூண்டோ தூண்டுதல். ஜூஹோ சேரியை ஸ்லம்டாக் மில்லியனரில் காட்டியிருப்பார்கள். ஆனால் எனக்கு வேறு பல படங்களின் பாதிப்பில் தாராவியை பார்க்க விருப்பமானது.  மும்பை வந்தவுடன் முதல் நாளாக தாராவி தான் சென்றேன். ஒரு நாள் முழுக்க தாராவியில் உள்ள பெரும்பாலான சந்துகளில் திறிந்தேன். நான் நினைத்து பார்த்ததைவிட இடம் மோசமாக இருந்தது. இடத்தைவிட அங்கு வரும் நாற்றம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  ஆனால், அவர்களது கொண்டாட்ட மனநிலை தற்போது இருக்கும், என்னுடைய மன நிலையை விட பல மடங்கு அதிகமாக இருப்பது முரணாக இருந்தது. குழப்பம்! ஸ்லம்டாக் மில்லியனரில் அமிதாப் பச்சனை பார்க்க ஜமால் மாலிக் மலத்திற்குள் குதித்து வரும் கொண்டாட்ட காட்சி நினைவுக்கு வந்தது.  எப்படி இவர்கள் வீட்டிற்கு தண்ணீர் வருகிறது? வளர்த்தும் நாய், பூனைக்கு எப்படி இவர்கள் இடம் பகிர்கிறார்கள்? இங்கு கல்யாணம் நடந்தால் எந்த மாதிரி இருக்கும்? வீட்டை விட டீவி அளவு பெரிதாக இருக்கிறதே!? இவர்க