Posts

Showing posts from October, 2021

மெஸ்மரைஸிங்

Image
                'அவன்' தான் முதன்மை கதாப்பாத்திரம், அவனைச் சுற்றியே காட்சிகள் நகரும்... காட்சி:1                 நேரம் இரவு ஒன்பது இருக்கும், பேருந்தில், இளையராஜா பாடல், 'சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்' ஒலித்துக் கொண்டிருக்கிறது, அதிகக் கூட்டம் இல்லை, மொத்தமே ஓட்டுனர் நடுத்துனரோடு சேர்த்தி ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள், அப்போது மனைவி: உங்க அண்ணனுக்கு எதுல கஞ்சத்தனமா இருக்கிறதுனு ஒரு அறிவே இல்ல... சாப்பாடு கொஞ்சம் சேத்தி வந்திருந்தாலும் நல்ல ஆளா பாத்து போடமாட்டாரா? அவன்: (அதனை பொருட் படுத்தாமல் பேருந்தில் ஓடும் பாட்டோடு சேர்ந்து) "கண்ணே என் கண் பட்ட காயம், கை வைக்கத் தானாக ஆறும்" என காற்றில் ஆடும் அவள் கூந்தலை ஒதுக்குகிறான். மனைவி: ஏய்,... பாப்பா பாக்குது... அவன்: பாப்பா தான?(ஜன்னல் ஓரத்தில் வேடிக்கை பார்த்து வந்த மகளிடம்) சாமி இங்க பாருங்க (மகளை எடுத்து மடியில் வைத்து) நான் இப்ப அம்மாக்கு முத்தம் கொடுத்துக்குட்டா?"  மகள்: ஓ... அப்ப, நான் உங்களுக்கு முத்தம் கொடுப்ப... அவன்: வெல்கம் டியர்... இங்க வாங்க... (என தன் மகளையும், மனைவியையும் பக்கத்தில

இன்னொரு முகம்

Image
காலை கிளம்பும் வரை வளிச்செடுத்த வானமாய்க் கிடந்தது, பள்ளி வந்ததும், தரை பிளக்க மழை பொழிந்ததும் மனம் கணக்க மாணவர் மனதில்  மழை மீது வெறுப்பு வந்தது... புதிய Exo சோப் பாத்திரம் விளக்க  வெளியில் வைத்ததை பதம் பார்த்து பாதியாக கரைத்ததும்  அதே மழை தான்... மணி முற்றி சாய்ந்த நெல்லை அறுவடைக்கு முந்தைய நாளில்  எங்கிருந்தோ வந்த மழை எக்கச்சக்கமாய் சேதம் செய்தது ஈரக்காட்டில் அடுத்த நாள் அறுவடை செய்ய முடியாமலும் செய்தது! மூன்றடசு ஊத்திவிட்டாள், மணி ஏழை கணித்து ஆப்பமும் ஊற்ற ஆரம்பித்தால், தள்ளுவண்டியின் மேல் படுதார் கிழிந்து பறக்கும் விதத்தில் வீசியது மழை, மேலும் மீதி மாவை வைக்க பக்கத்து வீட்டு ஜோதியின் குளிர்சாதனப் பெட்டி  அனுமதிக்கும், ஆனால் அதற்கு அனுமதி  கேட்கும் போது ஜோதியின் முகத்தை  நினைத்தால் தான் மனம் மழையை  வைய்ய நினைக்கும்... "இன்னும் மெத்தை வீடில்லை அதே சீமை ஓடு தான்" "ஒரு மழை காலமாது ஒழுகாத வீட்டில் இருக்கனும்" எவரைப் பார்த்தாலும் இந்தத் தாழ்ந்த புலம்பல்கள் அவளுக்கு, மெத்தை வீடு கட்டும் கனாவை கணவனிடம் சொல்லியும் வீண், மகனிடம் சொல்லியும் வீண், சீமை ஓட்டுச் சந்துகளில் ஒ