Posts

Showing posts from August, 2022

அட்டகத்தி

Image
எங்கோ கூட்டத்தில் ' தரர தீரரர ரத்தாத்தா ' என்று சந்தோஷ் நாராயணனின் அட்டகத்தி பின்னணி இசையை ஒருவருடைய காலர் டியூனாகக் கேட்டதும் , வைத்திருந்தவர் உடனடியாக என்னுடைய உறவினர் ஆகிவிடுகிறார் .  அட்டகத்தி படம் வெளிவந்து பத்து வருடங்கள் , 2012 ஆகஸ்ட் 15 வெளியாகியிருக்கிறது . பா . இரஞ்சித் அவர்களிடம் இருந்து சார்பட்டா வேண்டுமா மெட்ராஸ் வேண்டுமா என்றால் இரண்டையும் தாண்டி அட்டகத்தி வேண்டும் என்பேன் . முதல் மரியாதை , ரிதம் மாதிரியான என்னுடைய உலகில் அட்டகத்தியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் .  நான் பல தினகரன்களை   பார்த்திருக்கிறேன் , நானே தினகரனாகவும் இருக்கிறேன் . அந்த அளவுக்கு ஒன்றிய படம் . நான் பத்தாவது படிக்கும் போதே இந்தப் படத்தை என்னால் மிக நெருக்கமாக உணர்ந்துகொள்ள முடிந்தது . தினகரன் ஜட்டியை கேட்ட போது ' ஹான்ன்ன் ... எங்க அம்மா வீட்டுக்கு கொடுத்து அனுப்பீட்டேன் ' என்று அவுங்க அம்மா சொல்வதிலிருந்து , பேண்ட் தைத்ததை பெருமையாக நண்பர்களிடம் காட்டிக்கொள்வது , சோகம் வருவதற்காக படம் பார்ப்பது ,