Posts

Showing posts from June, 2019

சிறுகதை- இளம் பெண் கொசு

Image
செ ன்னை, அண்ணா நகர், ஐயப்பன் கோவில் அடுத்த சந்தில், வாகை மரம் பெரிதாக வளர்ந்திருந்த அந்த காம்பவுண்டிற்குள் இரண்டாவது முறையாக ஜனனித்த அது சுற்றிக் கொண்டிருந்தது, சுற்றுவதற்கு அதற்கு காரணமும் இருந்தது... சூரியன் மறைய இன்னும் சில நேரங்களே இருப்பதை அது உணர்ந்திருக்கும்... அதன் வேகத்தில் அதற்கு இணையாய் இன்னொன்றும் வந்து சுற்றத் தொடங்கியது... சேர்ந்தே சுற்றியது... அது அதை கவனித்தது... இறக்கையின் வேகம் தன்னைக் காட்டிலும் வேகமாய் அடிப்பதை வைத்து அது ஆண்ணென்றும், தன்னோடு இணைவதற்காக வந்திருப்பதையும் உணர்ந்ததா எனத் தெரியவில்லை... இருந்தும் இணைந்தது. இணைந்த தோற்றம் பார்ப்பதற்கு ஒரு சீன வார்த்தை போல தோன்றியது. பதினைந்து நொடி தான்... சிற்றின்பத்தில் எல்லாம் அதனை வகைப்படுத்த முடியாது... அதற்கு அது பிறத்தலே இன்பம்... அது வரை உயிரோடு இருத்தலே இன்பம்... அதற்கு அது உயிர் வாழ்வதை அனுபவிப்பதும் இன்பம்... பதினைந்தாவது நொடி தன் பொறுப்பு முடிந்ததாக அந்த ஆண் கொசு பிரிந்தது... அடுத்த நொடி  உலகிலுள்ள எல்லா உயிர்களையும் போல முக்கிய பொறுப்பு அந்த பெண் கொசுவிற்கு... முட்டை வைக்க மனித இரத்தம் தேவை... மனி