Posts

Showing posts from August, 2023

அசிங்கமாக இருக்கிறது

Image
அசிங்கமாக இருக்கிறது! "போய் அவுங்க வீட்டுல சாப்பிடுறதெல்லாம் ஓக்கே! எஸ் சி பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்டு வீட்டுக்குக் கூட்டீட்டு வர முடியுமா உன்னால?!" என்று சிரிக்கும் நண்பனிடம் "பன்றதுல என்ன பிரச்சன" என்று நான் வாக்குவாதத்தில் ஈடுபட, முட்டாள் தனத்தின் உச்சியில் நின்று அவன் பேச, நான் அமைதியாவோம் என்று முடிவெடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த அசிங்கம் என் மேலேயே எனக்குத் தோன்றியது. இரண்டு மாதமாக அலைந்து தேடிய வாடகை வீடு. ஓரிரு வாரத்தில், என் அக்காவின் தோழிக்கு எங்கள் மேல் வீடு காலியாக இருப்பது தெரிந்து, கேட்டு வந்ததும், முதலில் சரி சொல்லிய எங்கள் வீட்டு ஓனர், அடுத்த நாள் "நேத்து அந்தப் பொண்ணோட வீட்டுக்காரன் முகத்த வெச்சு கண்டு புடிக்க முடியுல, இன்னைக்கு பொருள இறக்கி வைக்க, அந்தப் பையனோட அப்பா அம்மா வந்ததும் தெரிஞ்சு போச்சு எஸ் சினு, சங்கடமா போச்சு, அந்தப் பொண்ணு சாமானம்லாம் எடுத்துட்டு வந்துட்டோம்னு கெஞ்சுச்சு. என்ன பன்றதுப்பா, நம்ம பொலங்குற ஊட்டுல அவுங்கள குடி வைக்க முடியுமா!? பேசி தாட்டி விட்டாச்சு" என்ற என் வீட்டு ஓனரின் கண்களிலிருந்

பிரச்சனை

Image
பிரச்சனை எத்தனையோ பிரச்சனைகள் நம்மைச் சுற்றி... அதில் இது தான் உமக்குப் பிரச்சனையா!? என்று அதட்டாதீர்கள். சிலர் பாலை வனத்தோடு ஒப்பிடுகிறார்கள்! மூடர்கள். பாலை வனத்திற்கு உயிர் இல்லையே. கதைகள் கேட்டு கேட்டு காதுகள் கணக்கிறது. கண்கள் இன்னும் பாவம்... என் கண்களுக்கு வாய்கள் இல்லை, இல்லையென்றால் கதறிவிடும்... அந்த ஆசைகள் மின்னி மறைகிறதே ஐயோ! பெரும் பிரச்சனை! மதிய வேளைப் பேருந்தின் மத்திய இருக்கையில், அனலாடும் மெரினாவின் துப்பட்டா நிழலில், அண்ணா நகர் டவர் பூங்காவின் பச்சைகளின் மையத்தில், திரையரங்கின் தேவையற்ற வெளிச்சத்தில்... போதும் போதும்... அவ்வளவாக அறியாத வயதில் கிடைத்த அவசரமான முத்தத்தின் சுவடுகளே மறந்துபோன பாவமான கன்னங்களையும் பரிதாபமான உதடுகளையும் வைத்துக் கொண்டு அலைகிறேன்... சரி அலைகிறோம்... வேண்டாம் அதை மட்டும் சொல்லாதீர்கள்! தயவுகூர்ந்து வேண்டாம்! மனசாட்சிக்கு பொதுவாக வேண்டாம்! 'காஜி' என்று மட்டும் கடக்காதீர்கள்.