Posts

Showing posts from April, 2020

பேனா நினைவுகள்

Image
பேனா நினைவுகள் (கட்டாயம் கவிதை கிடையாது) 'இதோ இந்த கிணத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்த மோசன் கடைசியாக எனக்கு கொடுத்தது தான் நேத்து காட்டின பேனா' என்று சித்தப்பா காட்டிய பேனா, அக்கா அப்பாவிடம் அழுத போதும் அழுத்தமாய் நான் காட்டிக்கொள்ளவில்லை நான் தான் எடுத்தேனென்று, அடுத்த நாள் அக்காவுக்கு அழுது காய்ச்சலே வந்துவிட்டது, குருகியிருந்தது என் மனது, ஒருதுளியும் அக்கா என்னை சந்தேகிக்கவில்லையே... சமீபத்தில் அக்காவிடம் கூறினேன் அன்று நான் தான் உன் பேனாவை எடுத்தேனென்று 'எந்த பேனா?' அக்கா மறந்து போனாள்... பென்சில்களை வெறுக்க வைத்த பேனாக்கள், ஒன்றாவது படிக்கையில் ரெனால்ட்ஸில் எழுதியதற்காக கார்த்தி மிஸ் அடித்தார் 'பென்சில் எங்க போச்சு' என்று... பாசிபருப்பு டப்பாவில் பத்து ரூபாய் எடுத்துவிட்டேன் தாஜுதீன் காட்டிய பேனா போல் வாங்க, அடுத்த நாள் பேனாவைப் பார்த்துவிட்டு அம்மா காட்டிவிட்டார் சீமாத்துக்குச்சியின் வலுவை... எப்போதும் லீக்கடிக்கும் என் அப்பா எனக்காக வாங்கிக்கொடுத்தப் பேனா... ஆறு பேர் நிறைந்த எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஐந்து ரூபாய்

வாட்ஸப் காதலி

Image
                        Online தேசத்தின் ஆண் lion🦁🙈 என்னை PicsArt Dpயால் ஹேங்காகச் செய்த பெண்விழியே...👰 One line ஸ்டேட்டஸ்ஸை அப்டேட் செய்து வள்ளுவனினும் மெல்லிதாய் காவியம் படைத்த காதலியே...🤗 உன் typing பார்க்கையில் என் ஸ்பைனல் கார்டில் ஹைப்பிச்சில் BGM ஓடுதடி;😃 நான் online வந்ததும் உன் last seen பார்க்கையில் feeling lonely மனமும் ஆகுதடி...😣🙄 Emojiகளின் பாவனையால் என் ஹார்ட்டை ஆண்ட்ராய்டில் அடைத்தாயே...❤ Tom and jerryயாய் இருந்த நாம் ஒன்றிரண்டு dare மெசேஜிலேயே  Timon bumba ஆனோமே...💘 நீ டோரா ஆனால் புஜ்ஜி நானே என்றும் உந்தன் பின் வருவேனே🏃 குள்ளநரி போலே உன் அண்ணன் வந்தால், அந்நேரம் புஜ்ஜி - bro (brother) ஆவேனே...👼 Grouphiயில் பளிச்சிடும் எனது பால்வண்ண குல்பியே!👧 நீ groupல் குட் நைட் சொன்னாலும் எனக்காக சொன்னாய்!! உணர்கிறேன் உன் சிமிக்கையை...☺ Broadcastல் நீ அனுப்பினாலும் வாடாது என் மனது;🙂 'Hmmm' என நீ முடிக்கும் போது தான்  என் விழி வேர்க்குது;😪 'Haii' போட்டு ஓரத்தில் ஒரு ஸ்மைலியை அனுப்பினாயானால் Freez ஆகும் என் உடலு, இருந