Posts

Showing posts from December, 2019

சிறுகதை: தோசை

Image
ஃபோனில், அம்மா: அக்கா வீட்டில படிக்கிறதுக்குலாம் நல்லா தா இருக்கா தம்பி? அருண்: அதுலாம் சூப்பரா இருக்குதுமா... நல்லா தான் படிச்சுட்டு இருக்கேன்.. எந்த டிஸ்டர்பன்ஸும் இல்ல... சரி நீங்க என்ன பண்றீங்க? அம்மா: இப்பத்தான் ஏனம் கழுவீட்டு வந்தேன்... உங்க அப்பாக்கு பொறி வருக்கிறதுக்கு பூண்டு தொலுச்சிட்டு இருக்கேன். அருண்: அப்புறம்ம்ம்... அம்மா,.. இந்த பவித்திரா இருக்குல்ல,.. அதுக்கு முந்தாநேத்து பிறந்தநாள் வந்திச்சு... விஷ் பன்னவே இல்லையே... பேசக்கூடாதுனு விட்டிட்டேன். அம்மா: அவ கூட இன்னும் பேசீட்டுத் தான் இருக்கியா?! அருண்: இல்லமா...நாளு மாசம் கிட்ட ஆச்சு, இந்த பிறந்த நாளைக்குத் தான் விஷ் பன்னலாம்னு பாத்தேன்... அதுவும் பிறந்தநாளைக்கு வீட்டுக்கு போயிருச்சாமா, அதோட ஃபிரண்டு சொல்லுச்சு...சேரி இதுவும் நல்லதுக்குத் தான்னு நானும் கூப்பிடுல... அம்மா: அதாந்தம்பி... அதோட விடு... ப்ரேக் அப்னு ஆயிருச்சுல,... அருண்: அம்மா... (ஆவேசமாக) ப்ரேக் அப் தான்... பவிலாம் எனக்கு செட்டே ஆகுதுமா... அம்மா: ஆமாண்டா... அவுங்க அம்மாவையும் நான் போன வாரம் பால் சொஷைட்டீல பாத்தேன்... அதென்னமோ மூஞ்சீல