Posts

Showing posts from April, 2023

எனதருமை பீகார்

Image
எனதருமை பீகார் மேற்கத்திய கழிவறை கிடைத்தால் அமர அருமையான இடம், அடியில் திறந்து எச்சில்  துப்பிக் கொள்ளலாம். இந்திய கழிவறையாய் இருந்தால் கொஞ்சம் சிரமம் தான், நின்று தான் வர வேண்டும், நீர் நிரம்பி மலம் மிதந்து இரயிலின் தடதடபுக்கு இசைந்து கொடுக்கும், மூடவும் முடியாது பழகிவிட்டால் சுபம்... மழைக் காலமாக இருந்தாலாவது பரவாயில்லை ஆனால் அது வெயில் காலம்... இரும்பு பெட்டிக்குள் இருக்கும் இடத்தில் காற்று தவழ்ந்து செல்வதே கடினம்... மடக்க முடிந்த அளவு கை கால்களை மடக்கி வை... அடக்க முடிந்த அளவு கண்களைக் கொண்டு கற்ற வார்த்தைகளைக் கொண்டு அடுத்தவனை அடக்கி கிடைத்த இடத்தில் காலை வை... அமர இடம் கிடைத்தால் ஆசிர்வதிக்கப் பட்டவன் என்று ஶ்ரீராமரை நினை... மற்றவர் முதுகை முத்தமிட வேண்டும்,  வியர்வை நெடியை விரும்பிப் பழக வேண்டும், குமட்டல் வரும் நேரம் புகையிலைத் தூளால் வாயை அடைக்க வேண்டும், கிடைத்த இடத்தில்  காரி உமிழ்ந்து  காவியால் தங்கள்  வாய்த்தடம் பதிக்க வேண்டும். ஒரு லிட்டர் பாட்டிலில்  ஊர வைத்த சுண்டல் பத்து பச்சை மிளகாய், இரண்டு எழுமிச்சை இரண்டு நாள் பயணம், இறங்கியதும் மனைவி பிள்ளைகளைத் தேடிக்  கொள்ளலாம்.

தீதர்கன்ஞ் யட்சினி

Image
  தீதர்கன்ஞ் யட்சினி 2300 ஆண்டுகளுக்கு முன்பு அசோகர் காலத்தைச் சேர்ந்த யட்சினி சிற்பம். ஒரே மண் பாறையில் செய்யப்பட்டு, ‘மண் பாறையா இது?!’ என நம்ப முடியாத வகையில் பளபளப்பாக்கப்பட்ட யட்சினி. புராணங்களில் மனிதர்களைவிட உயர் சக்தி கொண்டவர்களாக யட்சினிகள் கருதப்படுகிறார்கள். பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை ஆற்றங்கரையோரத்தில் தீதர்கன்ஞ் என்ற இடத்தில் இருந்து 1917 அன்று தான் இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. 2300 ஆண்டுகளுக்கும் பழமையான இச்சிற்பம் அது வரையில், ஆற்று ஓரத்தில் துணி துவைக்கும் கல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  பொதுவாக யட்சினிகளுக்கு சிறுத்த இடை, பரந்த தோள்கள், பெருத்த மார்பகம் என அழகும், காமமும் கொண்டு வடிவமைப்பது வழக்கம். இந்து, சமணம், பௌத்தம் என மூன்று சமையமும் யட்சினிகளைப் பற்றி கூறுகின்றன.  யட்சினி போல யட்சர்களும் (ஆண்) இருக்கிறார்கள். பெரும் பாலும் இரக்க குணம் படைத்த கதாபாத்திரங்களாகவே யட்சினிகள் அமைத்திருந்த போதும் தீய குணம் உடைய கதாபாத்திரமும் இருக்கிறதாம். (மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா) நான் யூ.பி.எஸ்.சி படிக்க ஆரம்பித்ததும் எல்லா பாடமும் சுவாரஸ்யமாக இருந்தது. அதில