Posts

Showing posts from March, 2021

Vintage கவிதை

Image
  மழைப் பெய்து நாளாச்சு பெய்ய வா... பேய் மழையாக வா... மையல் கொள்... தெய்யல் பார்வையில் இருவரையும்  சேர்த்துத் தெய்... இரண்டாக இருப்போரை இருக்கமாய் வை... அவகாசம் இல்லை அன்பைக் கொட்ட... ஆதலால், அத்தனையும் கொட்டு, வாஞ்சை முட்டும் வஞ்சனையைவிட்டு... தெக்குகள் எங்கும் ஏக்கங்கள் எனதாய்... ஆக்கும் தோற்றங்கள் உனதாய்... முரன், ஊற்றாய் உயர்கிறாய்... நான் வறண்டே கிடக்கிறேன்... பறவைகள் ரசிக்கிறேன்; பல குழந்தைகளோடு பேசிச் சிரிக்கிறேன்; பயணம் கொள்கிறேன்; அயர்ச்சியின்றி படிக்கவும் செய்கிறேன்; அத்தனையிலும் மேலாக அகத்தில் நீ... உன் நினைவுகள்... பாசாங்கில்லை, உன் முகம் ஞாபகமே இல்லை, உனது குரலோசை துளியும் நினைவில்லை, உன் கோபங்கள் கூட ம்ஹூம்... குறைந்தபட்சம் நினைவு படுத்த வா... மீண்டும் வா... நீர்த்துப் போன சடலம், நிரந்தரமான சலனம், பயனற்ற பயணம், இதுவான நான், இவைக்கு மேல் நீ வந்தால் தான்... வேலை இல்லையா எனக்கு? உன்னை எண்ணிப் புலம்புவது தான் வேலையா? தாமதிக்காமல் வா தையவு செய்து வா... "கெஞ்சுவது காதலில்லை கெஞ்ச மாட்டேன் போ" வசனம் பேசி வந்தேனே... கொஞ்சம் திருத்திக் கொள்கிறேன் மிஞ்சுவது காதல் அவதானிக்