Posts

Showing posts from May, 2020

12 A Bio - 21

Image
12ஆம் 'அ' பிரிவின் 21 இருபத்தொன்னு பாருடா சிரிக்குது... இருபத்தொன்னு இங்க தான் பாக்குது... இருபத்தொன்னு ஏனோ கோபமா இருக்குது... இரண்டாம் பெஞ்சில் முதலாளாக இருப்பவள் தான் அவள்... எனவே தான் அவளுக்கு பெயர் இருபத்தொன்னு... அங்கு மட்டும் அவளில்லை எங்கள் நெஞ்சிலும்... முந்தா நாள் டாய்லட் சந்தில் நிகழ்ந்த சண்டை, பீட்டியிடம் மாட்டி வீட்டிலிருந்து பெற்றோர் வருகை, அவ்வப்போது பேண்ட் ஜிப் அவிழ்ந்துவிடும் சிக்கல், பனியனற்ற மேணியில் உப்புப்பூத்த யூனிஃபார்ம், உசாரற்ற வேளையில் காலியான உருளைக்கிழங்கு பொரியல், இத்தனை பிரச்சனையில் இருபத்தொன்னை எங்களை பார்க்க வைப்பதும் எங்களுக்கான தலையாய பிரச்சனை. அவள் அப்பா பீடி குடிப்பார், சாதாரண வார் செருப்பு, முன் வழுக்கை, அம்மா எதோ பழைய முகம், அழுக்கு நிறத்தில் சீலை, இவர்களுக்குப் பிறந்த இருப்பத்தொன்னு மட்டும் எப்படி இப்படி இருக்கிறாள்! தேவதையடா! போயும் போயும் தோசை திம்பாள், ரச சாதம் சாப்பிடுவாள், தயிர் ஊற்றிக்கொள்வாள், ஊறுகாயும் சேர்த்திக்கொள்வாள், அதுவும் அசிங்கமான எலுமிச்சம் தான், பு.பிரவின் கூட பூண்டு ஊறுகா

வேண்டிக்கொண்டேன்

Image
வேண்டிக்கொண்டேன் அவ்வா என்பார்கள், அப்பத்தா என்பார்கள், அம்மாயி என்பார்கள், பாட்டி என்பார்கள், 'நான் ஏன் ஆத்தா என்கிறேன்? யார் என்னை இப்படி கூப்பிட பழக்கியிருப்பார்கள்?' பல முறை யோசித்திருகிறேன்... யோசிக்கும் போது எதுவும் கடவுளிடம் வேண்டியதாய் நினைவில்லை.... அம்மாவுக்கு பாட்டு புடிக்காது அப்பாவுக்கு பாட்டு வரி மாறினால் ஆத்திரம் வரும். 'சத்யாவில் - நீங்காத ரீங்காரம் நாம் தானேவா? நான் தானேவா?' சண்டை போட்டிருக்கிறோம். தாத்தாவுக்கு தண்ணீரில் எண்ணெய் போல பாட்டு, ஒட்டவே மாட்டார். ஆனால் ஆத்தா இல்லாமல் அவள் கும்மி பாட்டில்லாமல் எங்கள் ஊர் முளைப்பாரி சப்பாரம் எதுவுமில்லை, சங்கர் மகாதேவனை எனக்கு ரசிக்கத் தெரியுமானால் மரபுவழி ஆத்தா தான் காரணமென தெளியும் போது கடவுளிடம் எதுவும் வேண்டியதில்லையே... எனக்கே தெரியும் ஓர வாஞ்சை தாம்... அக்காவைக் காட்டிலும் ஆத்தாவுக்கு என் மேல் தாம் வாஞ்சை அதிகம். ஆத்தாவீட்டில் எல்லாரும் சாப்பிட்ட வட்டலை கழுவியாக வேண்டும். அக்கா முதற்கொண்டு. தாத்தாவையும் என்னையும் தவிற. இதற்காக எதற்கு நான் கடவுளை வேண்ட