Posts

Showing posts from July, 2020

கோழை

Image
கோழை கடவுளை ஒருமையில் திட்டிவிட்டேன்... கண நேரத்தில் மன்னிப்பும் கேட்டுவிட்டு காத்திருந்தேன்... எதிரிலுள்ள சித்தப்பாவை கொன்றவிட வேண்டுமாய் இருந்தது, அவரது சிரிப்பு மௌனராகம் கம்பளிப்பூச்சிகளாய் தெரிந்தது... அருகில் அக்கா அருவருப்பாய் பார்ப்பதாய் உணர்ந்தேன். அப்படித்தான் அவள் பார்த்தாள்... எனக்கு உதவிக்கு வந்த மாமா பையனை ஓங்கி அடிக்க முற்பட்டேன். இன்று இந்த நாளினை நான் தற்கொலை செய்யாமல் கடக்க வேண்டும்... அன்றிலிருந்து அங்கு சாப்பிடக்கூடாது என்று கூட சபதமெடுத்தேன்... ஊரிலுள்ள ஒப்பாரிகள் எனக்காக உருவானவை.. கடவுளை பலமுறை கடிந்தேன்... எதற்காக எனக்கு மட்டும் இத்தனை பிரச்சனை?! ஆறுதல் கூற யாருமற்று தன்னந்தனியாக ஆதரவற்றேன்... சிரித்தார்கள், ஒவ்வொரு முறையும் சிரிக்கிறார்கள், சிரிப்பு இவ்வளவு வலிக்குமா! மூஞ்சி களின் சதைகள் விரிந்து சுருங்குவதில் இத்தனை குரூரங்கள்? இப்படியே முடிந்துவிடாது எப்படியும் ஒரு சிறு வாய்ப்பு வரும் பெரிய மாற்றம் தரும் நான் என்னை நிரூபிப்பேன் நம்பினேன், அடியோடு வீணாகின. மனிதர்களை வெறுத்தேன் தத்துவங்களை நினை