Posts

Showing posts from April, 2024

மதுரையும் மதுரை நிமித்தமும்

Image
  மதுரையும் மதுரை நிமித்தமும் முன்பு ஒரு முறை நா.முத்துக்குமாரின் வரிகளை கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன், அதை மீண்டும் ஒருமுறை பலமாக உணர்ந்தேன். "பயணம் செய்வதற்கு போதுமான பணமும், பயணம் செய்வதற்கான மனநிலையும் உள்ளது தான் உலகிலேயே மிகப் பெரிய சொத்து!" வீட்டில் அப்பா அம்மாவுக்கு மருத்துவப் பிரச்சனைகள், அலுவலகப் பணி, சரியான திட்டமில்லாமல் குறும்படம் எடுப்பதாக இறங்கி சிக்கிக்கொண்ட கடன் என இவற்றை எல்லாம் ஓரம் கட்டி முடிக்கும் போது தேர்தல் நேரப் பணி... அப்படி இப்படியென்று ஒரு வழியாக பயணத்திற்கான மனநிலையும் சூழலும் அமைந்தது. இயேசு நாதர் மூன்றாம் நாளே உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் மட்டும் நான்காம் நாள் உயிர்த்தெழுந்திருந்தால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்திருக்குமே! இப்போது மூன்று நாள் தான் விடுமுறை. சரி எங்கே செல்லலாம்? ஒடிசா! மூன்று நாட்களில் சென்று வரமுடியுமா என்று சங்கடமே படாமல் IRCTC-யில் இரயில் பயணம் நேரம் பார்த்துவிட்டு, சரி தமிழ்நாட்டிற்குள் எங்கு செல்லலாம்?, மதுரை. மீனாட்சி அம்மன், நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் இல்லாமல் வேறு எங்காவது போக வேண்டும் என முடிவு செய்

கழுகு மலை - வெட்டுவான் கோவில்

Image
    கழுகு மலை - கரிசல் மண் - வேட்டுவான் கோவில் கழுகு மலை, சமீபத்தில் தான் கோபல்ல கிராமம் படித்திருந்தேன், அக்கையா, காயடி கொண்டைய்யா, கோவிந்தப்ப நாயக்கர் என அத்தனை கதாபாத்திரங்களும் சூழ்ந்து கொண்டு "எப்போது பார்த்தாலும் பசுமை கண்ணை கவ்வுகிறது, காதைக் கவ்வுகிறது என்று கூறிக்கொண்டே இருக்கிறாயே, இங்கே பார் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருமை, இந்த அழகு உன்னை கவரவில்லையா?!" என்று கேட்பது போல் தோன்றியது! பூமிக்கு இட்ட காஜல் போல் கரிசல் மண் அத்தனை கவர்ச்சியாக இருந்தது.  கோவில்பட்டியிலிருந்து கழுகு மலைக்குப் பேருந்தில் சென்றோம். ரண்டி, ஏமி, நிதர போயி என தெலுங்கு என்னை தழுவிக் கொண்டு கடந்தது. வெளியில் பேணர்களில் கடம்பூர் ராஜுவும் அவரின் மகன் அருண்குமாரும் ஒரு சேர ஏர் நெற்றியுடன் பெரிய முகங்களோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் குகைக் கோவில், புடைப்புச் சிற்பங்கள் என்றால் பல்லவர்கள் நினைவு வரும், ஆனால் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட தென் தமிழ் நாட்டு கலைப்படைப்புகளும் நம்மை கட்டாயம் ஆச்சர்யப்படுத்தும்.  குன்றக்குடி குடைவரை கோவிலில் பாண்டியர்களின்  க