Posts

Showing posts from June, 2020

போத மலை - பயணக்கட்டுரை

Image
சத்தியம் செய்துகொள்கிறேன். நருக்கென்ற வார்த்தைகளால் மிகக் குறைவான பத்திகளில் இந்தப் பயணக்கட்டுரையை எழுதி முடிக்க வேண்டும் என்று. 'அலுவலகத்தில் தெரிந்தவர்கள் போகிறார்கள், நாமும் போலமா?' என்று அக்கா கேட்ட போது மலையென்றாலே மழையைக்காட்டிலும் எனக்கு பிடிக்கும், அதனால் உடனே ஓக்கே சொல்ல அக்கா அவளுடன் இன்னும் இரண்டு பெண்களை கம்பெனிக்குச் சேர்க்க ஏறத் தயாரானோம். எங்க அக்கா சொல்கிற இடம், இவர்களே ஏறத்துணிகிறார்கள் என்றால் எப்படியும் பழனி மலை பெருக்கல் மூன்று தான் இருக்கும், "சேரி ஒரு அனுபவம் தானே" என்று கெளம்பினேன். காலை 6.30க்கு ஏறத்தொடங்கினோம், இரவு அங்கு தங்குவது உறுதியாக அறிந்து மாற்று உடை, ஒரு போர்வை, ஒரு வேலைக்கு உணவு, தண்ணீரோடு கெளம்பினோம். அக்காக்கு தெரிந்தவர் வர லேட் ஆகும் என்று சொல்ல மலைக்கு ஏறும் இன்னொரு கும்பலுடன் இணைந்து ஏறத் தொடங்கினோம். அவர்களில் யாரும் பரீட்சையம் இல்லை. அவர்கள் மலை வாழ் மக்களும் இல்லை, கீழே இருந்து எங்களைப் போல மேலே இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் தான், அவர்களில் ஒரே ஒரு பெண், அவ்வளவு தான், என்னுடன் மூன்று பெண்கள், அக்காவ