Posts

Showing posts from February, 2019

பிரிவினை

Image
  பிரிவினை   கு லமென்றும் இனமென்றும் குறித்த நிலமென்றும் நிலம் தனதென்றும் நிலத்தின் நிறம் தான் மட்டுமென்றும் குருதியும் மாறும் குலத்தாலென்றும் கடவுளும் அதற்கு உடந்தையென்றும் சத்தியம் செய்து பிரிவினை காக்கும் புத்தியோர் நடுவில் நான்... புணர்வதும் உணர்வதும் உணர்வதால் பூரிப்பதும் பூரித்த பூவுடலின் பிரிவினை பெண் ஆண்... ஆண்ணென்ற உயரம் கொண்டு பெண்ணியம் பேச பெருமை என்று பேசித்திரியும் பேதையர் நடுவில் நான்... இசையை ரசிக்க மதங்கள் தேவையா? இருக்கையில் அமர ஆற்றலாயினும் கோத்திரம் தேவையா? மதச்சார்பற்றது நம் இந்தியா! நம்புங்கள், மதச்சார்பற்றது நம் இந்தியா, தேசப்பற்று கொண்டு பிரிவினை வளர்ந்தால் பிரிவினை மூலம் பிறன்மணை நொந்தால் தமிழனும் அல்ல இந்தியனும் அல்ல சார்பும் சாதியும் தாண்டிய மனிதன் நான்... நான்- சா.கவியரசன்.. . Short film இல் ஒரு காட்சியை படமாக்க எழுதியது

வேளாண் ஹைக்கூ

Image
வேளாண் ஹைக்கூ நல்ல ஹைக்கூவின் மூன்று முக்கிய குணாதிசயங்கள்...வரும் நாட்களில் ஹைக்கூவை கை பிடிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... 1. நேரடி அநுபவம் 2. உவமை உருவகம் கூடாது. 3. மூன்றாவது வரியில் ஒரு திருப்பம். ஹைக்கூவை தமிழ் படுத்த எண்ணி அதனை 'துளிப்பா' என்று அழைத்ததும் உண்டு. அப்படி துளிப்பாவோ ஹைக்கூவோ வேளாண் சார்ந்து எழுதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் கடந்த வாரம் பொங்கலன்று 'ஹைக்கூ பொங்கல்' போட்டி கழனிப்பூவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பலர் முயற்சி செய்திருந்தனர், அவை பல தற்குறிப்பேற்றணியாகத் தான் இருந்தன, உதாரணத்திற்கு வர்ஷினி செல்வராஜ் எழுதிய 'விடியலுற்றான் கதிரவன் தன் பழையதை விலக்கி போகி என்னும் வடிவில்! பொங்கல் தீ...' அடுத்ததாக 'விவசாயின் வேதனையால் பொங்கியதோ பொங்கல்' என்று சரவணன் சந்தியான் எழுதியதும் அந்த வகையே... வேளாண்மையில் முதுகலை இரண்டாம் வருடம் படிக்கும் பிருந்தா எழுதிய 'வரட்டுப்பானையில் இனிப்பு பொங்கல் இன்று' என்பது எளிமையாக எழிலாக இருந்தது. அடுத்து அஷ்வின் எழுதிய, 'களத்திற்குச் செ

இது தான் காதலா!?

Image
இது தான் காதலா!? ஒட்டு மொத்த காதலையும் வாட்ஸப் ஸ்டேட்டஸ்க்குள்ள அடைக்கனும்... கப்புல் சீட் 400 ரூபாயாக இருந்தாலும் கஷ்ட்டப்பட்டு புக் பன்னனும், ஏன் என்றால் சில்வர் சீட்ல டிக்கெட் எடுப்பவன் பணக்குறை இல்லாதவனாக இருக்க மாட்டான், பரம்பரை பொருக்கியாக இருப்பானாம்... கோபமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் டெய்ரி மில்க்கும் கிட் கேட்டும் வாங்க காசு இருக்கனும். கடைசியாக பெட்ரோல், நம் வண்டிக்கு முப்பது ரூபாய்க்கு அடித்திருந்தாலும்... வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் வெளியில் சாப்பிட அழைத்துச் செல்ல வேண்டும்... விடுதியில் அவளுடன் இருப்பவர்கள் எல்லாம் பேய்கள், விசித்திர ஜந்துக்கள், நாம் மட்டும் தான் அவளுக்கு ஒரே உறவு, அதனால் இரவில் கட்டாயம் நாம் தான் ஃபோனில் உறவு காக்க வேண்டும், நமக்கு ஆய் வந்தாலும், அப்போது அங்கு கொசு கடித்தாலும்... ஒரு நாள் பேச முடியாமல் போக நேர்ந்தாலும், அதற்கு ஒரு வாரம் முன்பே எக்ஸ்க்யூஸ் வாங்கியிருக்க வேண்டும்... எக்ஸாம் டைம்மின் போது, அவளை என்க்ரேஜ் பன்ன வேண்டும், முடிந்தால் அவ்வப்போது ஃபோனில் பேசி படிப்பதற்கு கம்பெனி கொடுக்க வேண்டும

தில்லியில் இருப்பவர்கள் பாவம் செய்தவர்களா?...

Image
தில்லியில் இருப்பவர்கள் பாவம் செய்தவர்களா?... ஏழுமலையான் கோவிலைப் போலொரு நகரம் தான் தில்லி... ஆம்... காசுள்ளவர் சொகுசு வழி கொள்ளலாம்... காசற்றவர்- காசான் செய்த காற்று மாசோடு பொது வழி கொள்ளலாம்... பக்தியான பொழப்பைத் தேடி காத்திருக்கும் கஷ்டத்தோடு தில்லியின் பாதிப்புகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்... காரினுள் ஏசி, இறங்கினால் வீட்டினுள் ஏசி, நுழைந்தால் அலுவலகத்தில் ஏசி... கட்டுப்பாடற்ற காரின் புகையும், வீட்டின் புகையும், அலுவலகப் புகையும் மாற்றானுக்கு வீசி... பஞ்சாப் ஹரியானா பயிர் புகை தில்லி நகரை நாசமாக்குது... பனியும் தன் பணிக்கு புகையுடன் கைகோர்க்குது... சுலாப்பின் சர்வதேச கழிவறை அருங்காட்சியகம் மக்களுக்காக மாபெரும் இரயிலக அருங்காட்சியகமென தில்லி பறை சாற்றுதே...அந்த வழி அனைத்துமான காற்று மாசுக்கு ஒட்டுமொத்த தில்லியே அருங்காட்சியகமாய் ஆகுதே... மைனஸிலிருந்து ஐம்பது வரை செல்சியஸ் செல்லுதே... பைத்தியமான யானையாக பருவ மாற்றம் போகுதே... பழகிவாழும் மனித வாழ்க்கை பாவமாக சிரிக்குதே... மாற்றான் மேல் பழியை மாற்றிவிட்டு