Posts

Showing posts from April, 2019

சிறுகதை: இது இசையாவைப் பற்றிய கதையல்ல...

Image
குற்றம் கண்டு பிடிப்பது தான் இவர்களது வேலை, இதற்குத் தான் இவர்களுக்கு சம்பளமும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் புதிதாக கண்டுபிடிக்கும் மென் பொருளில் உள்ள குற்றங்களைக் கண்டு பிடிப்பார்கள், அவ்வப்போது இவர்களது வேலையான குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு மென் பொருளைக் கண்டு பிடிப்பார்கள்.  நாள் தோறும் அதே வேலை, வங்கியில் பாஸ்புக்கில் எழுதித் தரும் அந்தப் பெண்ணை போலத் தான் சதா ஒரே வேலை, மண்ணுக்குள் பாதிக்காலம் படுத்துறங்கும் தவளை நிலையும், அடைத்து வைத்த தண்ணீர் பாக்கெட்டை அமுக்கினால் பீச்சிடும் ஒரு நொடி போன்றதொரு முரட்டுத்தனமான உற்சாகமுமாக ஞாயிறு ஒரு நாள் கிடைப்பது தான் இவர்களுக்கான கச்சாப் பொருள் அந்த வாரத்தை கணினி முன் ஓட்டுவதற்கு... இதற்குளாக இவர்களுக்கு இன்னும் பல இன்னல்கள்... இவர்களை அறிமுகப்படுத்துகிறேன், அறைக்குள் நுழைந்ததும் மூன்றாவது கேபினில் "நான் அப்பறம் கூப்பிடுறேன், ஆஃபீஸ்ல இருக்கேன்" என்று போனை வைத்துவிட்டு கணினி முன் தொடர்கிறாளே இவள் இசையா, இதற்கு அடுத்துள்ள ஏசிக்கு கீழாகவே அமைந்துள்ள கேபினில் இருக்கும் இவள் ரேவதி... இசையா தன் பின்னாடி இருக்கும் கேபி