Posts

Showing posts from May, 2023

ஏலியன்ஸ்

Image
ஏலியன்ஸ் "இப்பலாம், எனக்குப் புதுசா நோய் வந்த மாதிரி ஃபீல் ஆவுது தெரியுமா?! இப்ப பாத்துக்கிட்டைனா காந்திஜீய பத்தி படிக்கும் போது, போன ஜென்மத்துல நான் தான் காந்திஜீயா இருந்திருபேனோ... அப்புறம் அதே மாதிரி கண்ணதாசன், பதினோரு ஆழ்வார்ல குறிப்பிட்ட பொய்கை ஆழ்வார், இவுங்கள எல்லாம் பத்தி படிக்கும் போது போன ஜென்மத்துல, இவுங்களுடைய அடுத்த ஜென்ம தான் நானோனு தோனுது, இதுக்கு முதல்ல நான் ஒரு சைக்கார்டிஸ்ட்ட போகனும்" இமை முடிகள் ஆட ஒரு பக்கமாகப் பின்னாடி திரும்பி வாசுகியிடம் சொல்லிக் கொண்டே, சாலையில் கவனத்தை வைத்து ஏக்ஸலேட்டரை ஒரே சீராக முறுக்கினான் அஸ்வத். வாசுகி "புரில" என்றாள், "அட நான் தான் போன ஜென்மத்துல காந்திஜீயா பொறந்திருப்பனோனு தோனுது" என்றதற்குப் பின்னாடி இருந்து கொண்டு மீண்டும் "புரில" என்ற பதிலை வேகமாக அளித்தாள், அவன் "எனக்குப் புரிஞ்சுருச்சு, ட்டாபிக்க மாத்தனுமா?" கேட்டதும், "ஆமா, மூடீட்டு வண்டிய ஓட்டு" என்றாள். மதிய உணவு வேளைக்கு அடுத்து இருக்கும் தெர்மோடைனமிக்ஸ் வகுப்பை அலட்சியப் படுத்திவிட்டு இருவரும் கல்லூரியிலிருந்து தேச